கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்க ள் சடலங்களாக மீட்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்று, நீரில் மூழ்கி காணாமல்போயிருந்த மூன்று இளைஞர்களும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், ஏனைய இருவரின் சடலங்களை தேடும் நடவடிக்கை அப்பகுதி கடற்றொழிலாளர்கள், பொலிஸார் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர்களது சடலங்களும் இன்று கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

நேற்று குறித்த பகுதிக்கு யுவதி உள்ளிட்ட நான்கு பேர் வாகனத்தில் வந்து, அப்பகுதியிலுள்ள கடலில் குளித்தபோது ஆண்கள் மூவரும் கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா- மதகுவைத்தகுளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய மனோகரன் தனுசன், தோணிக்கல் வவுனியாவை சேர்ந்த 26 வயதுடைய விஜயகுமாரன் தர்சன், வவுனியா- மதவுவைச்சகுளத்தை சேர்ந்த 26 வயதுடைய சிவலிங்கம் சகிலன் ஆகியோரே கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்க ள் சடலங்களாக மீட்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House