ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்கவே கிறிஸ்து பிறந்தார் - பிரதமர்
ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்கவே கிறிஸ்து பிறந்தார் - பிரதமர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

நல்லுள்ளம் படைத்தவர்கள் அமைதியை பகிர்ந்துக் கொள்வார்கள். தம் மீது வெறுப்பு கொண்டவர்கள் மீதும் அன்பு காட்டுபவர்களாக திகழ்வார்கள். சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்கவும், இவ்வுலகில் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்காகவுமே இயேசு கிறிஸ்து தனது முழு வாழ்நாளையும் அர்ப்பணித்தார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிறிஸ்து பிறப்பு தினத்தை முன்னிட்டு தனது நத்தார் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது நத்தார் வாழ்த்து செய்தியில் தொடந்து தெரிவிக்கையில்;

அமைதி மற்றும் அன்பின் அடையாளத்தை இப்பூவுலகில் விட்டுச்சென்ற இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நத்தார் நினைவூட்டுகிறது.

இறைவனின் அன்பும், மனித கண்ணியமும், மனிதநேயத்தை அடிப்டையாகக் கொண்ட சமுதாயத்திற்கு நம்பகமான அடித்தளமாக அமைந்தது.

பெத்லஹேமில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த இயேசு கிறிஸ்து, இவ்வுலகை யதார்த்தமாக நோக்குவதற்கு அவரது பிறப்பு முதலே முன்மாதிரியாக திகழ்ந்தார்.

நல்லுள்ளம் படைத்தவர்கள் அமைதியை பகிர்ந்துக் கொள்வார்கள். தம் மீது வெறுப்பு கொண்டவர்கள் மீதும் அன்பு காட்டுபவர்களாக திகழ்வார்கள். அன்பு, அமைதி மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் பொருள் உணர்ந்து தமது வாழ்க்கையை உயிர்ப்பித்துக் கொள்வர்.

சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்கவும், இவ்வுலகில் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்காகவுமே இயேசு கிறிஸ்து தனது முழு வாழ்நாளையும் அர்ப்பணித்தார்.

அந்த வெளிப்பாட்டை சரியான முறையில் உணர்ந்து, இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதன் மூலம் ஒவ்வொரு கிறிஸ்தவரின் வாழ்க்கையும் ஒளிமயமாகும்.

கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் வீழ்ச்சியடைந்த உலகை மீள புத்துயிர் பெறச் செய்வதுடன், நம்பிக்கை நிறைந்த எதிர்பார்ப்புகளுடன் நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவது உங்களுடைய பொறுப்பாகும்.

'நட்சத்திர ஒளியும், கிறிஸ்துவின் பிறப்பும், உலகை உயிர்ப்பிக்கும்' எனும் தொனிப்பொருளில் அலங்கரிக்கப்படும் இம்முறை நத்தார் தினம் ஒட்டுமொத்த உலகவாழ் மற்றும் இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்களுக்கு அர்த்தமுள்ள மற்றும் மகிழ்ச்சியான நாளாக அமைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்கவே கிறிஸ்து பிறந்தார் - பிரதமர்

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House