எந்த மேன்முறையீடுகளும் மன்னாரிலிருந்து இல்லை

தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பில் மன்னாரிலிருந்து எந்த மேன்முறையீடுகளும் கிடைக்கப்பெறுவதில்லை.
ஆணையாளர் ஜகத் லியன ஆராச்சி

தகவல் அறியும் சட்டமானது எல்லா நோய்களுக்குமுள்ள மருந்து அல்ல. ஆனால் எல்லா நோய்களுக்கும் மருந்துகளை கண்டுபிடிப்பதற்கு இவ் சட்டமூலம் பிரயோசனமாகும். தகவல் அறிவதில் வேறு மாவட்டங்களிலிருந்து மேன்முறையீடுகள் கிடைக்கின்போதும் மன்னாரிலிருந்து எந்தவித முறையீடுகளும் கிடைக்கப்பெறவில்லை என தகவல் அறியும் சட்டத்தின் புதிய ஆணையாளர் ஜகத் லியன ஆராச்சி இவ்வாறு தெரிவத்தார்.

அரச அதிகாரிகள் மற்றும் சமூக பிரதிநிதிகளுக்கான தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு செவ்வாய் கிழமை (21.12.2021) மன்னார் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இவ் அமர்வில் தகவலறியும் உரிமை, தகவல்களை எவ்வாறு வழங்க வேண்டும் போன்றவை தொடர்பில் இச்செயலமர்வில் விளக்கமளிக்கப்பட்டது.

இவ் கூட்டத்தில் தகவல் அறியும் சட்டத்தின் புதிய ஆணையாளர் ஜகத் லியன ஆராச்சி, மன்னார் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.குணபாலன், பிரதேச செயலாளர்கள் , தகவல் அறியும் சட்டத்தின் சிரேஷ்ட ஆய்வு அதிகாரி, சட்ட அதிகாரி, மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

இதன்போது தகவல் அறியும் சட்டத்தின் புதிய ஆணையாளர் ஜகத் லியன ஆராச்சி இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

நான் இப்பொழுது புதிதாக நியமனம் பெற்ற ஆணையாளர் ஆகும். சில சமயங்களில் நான் இவ் திணைக்கள ஆணையாளர் என்பதை மறந்துவிடுகின்றேன்.

ஏனென்றால் நான் முதலில் இவ் தகவல் அறிவதற்காக சத்தமிட்டுள்ளேன். இதனால் அதை நான் நினைவுகூர்ந்து செயலாற்றுகின்றேன்.

நான் ஒரு ஆணையாளர் என்ற நிலையிலிருந்து கதைக்கின்றபோது எனக்கு ஒரு வரையறை இருக்கின்றது. அந்த நிலையிலிருந்தே நான் உங்களுடன் கதைக்க வேண்டியுள்ளது.

நான் கடந்த செவ்வாய் கிழமைதான் இதற்கு ஆணையாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளேன். இதற்கு முன் நான் கதைத்திருந்தால் வேறொரு முறையில் கதைத்திருப்பேன்.

நான் தற்பொழுது இதன் ஆணையாளராக இருப்பதால் எப்படி தகவல் வழங்குவது தகவல் அறிவது என்பது மட்டுமே எனக்கு தெரிவிக்க முடியும்.

இங்கு காணி சம்பட்டப்பட்ட பிரச்சனைகள் மன்னார் வளங்கள் சம்பந்தமான பிரச்சனைகள் இது தொடர்பான தகவல் எவ்வாறு வழங்க முடியும் என்பது மட்டுமே என்னால் பேச முடியும்.

ஏனைய விடயங்கள் சம்பந்தமாக கதைக்க முடிந்தாலும் இந்த நிலையில் என்னால் பேச முடியாது.

நான் இப்பொழுது இங்கு வந்திருப்பது தகவல் வழங்குவது தொடர்பாகவும் தகவல் கொடுப்பது சம்பந்தமாகவே பேச வந்திருக்கின்றேன்.

தகவல் அறியும் சட்டமானது எல்லா நோய்களுக்குமுள்ள மருந்து அல்ல. ஆனால் எல்லா நோய்களுக்கும் மருந்துகளை கண்டுபிடிப்பதற்கு இவ் சட்டமூலம் பிரயோசனமாகும்.

இங்கு அருட்பணியாளர் ஒருவர் முன்வைத்த பிரச்சனையும் மற்றும் ஏனையோர் வைத்த பிரச்சனைகளையும் அடிப்படையாக பார்க்கின்றபோது தகவல் அறியும் சட்டத்தில் இதற்கும் ஒரு பங்கு இருக்கின்றது.

இதனால் நாம் தகவலை பெற்றுவிட்டோம் என்று பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டிவிட்டது என்று அல்ல.

இந்த தகவல்களை பெற்றுக் கொண்டு நாம் அடுத்த நடவடிக்கைக்கு செல்ல வேண்டும்.

லஞ்சம் ஊழல் போன்றவற்றை கண்டுகொள்வதற்கு தகவல் அறியும் தன்மை வேண்டப்படுகின்றது.

நமது வளங்களைப்பற்றி இவற்றை பாதுகாப்பதுபற்றி நாம் முன்னெடுக்க இவ் தகவல் அறியும் தன்மை தேவைப்படுகின்றது.

இங்குள்ள பிரச்சனைகளை ஓரளவு தீர்த்துக்கொள்வதற்கு தகவல் அவசியமானது. தகவல் அறிவதில் உங்களுக்கு எதாவது சந்தேகங்கள் பிரச்சனைகள் தோன்றுமாகில் நீங்கள் ஆணைக்குழுவுக்கு முறையீடு செய்யலாம்.

நீங்கள் தகவல்கள் கேட்டு அவர்களால் 14 நாட்களுக்குள் உங்களுக்கு தகவல் தராதபட்சத்தில் குறித்தொதுக்கப்பட்ட மேலதிகாரியிடம் மேன்முறையீடு செய்யலாம். அதன்பின் இதற்கு அவர்கள் 21 நாட்களுக்குள் இதற்கான தகவல்களை தரவேண்டும்.

இதற்கும் அவர்கள் பதில் தராவிட்டால் ஆணைக்குழுவிடம் நீங்கள் முறையீடு செய்யலாம்

பிரதேச செயலகங்களில் தகவல் வழங்கும் அதிகாரியும் நியமனம் பெற்ற அதிகாரியும் இருவரும் ஒரே இடத்தில்தான் காணப்படுகின்றனர்.

சில இடங்களில் தகவல் வழங்கும் அதிகாரி இங்கே இருப்பார் நியமனம்பெற்ற அதிகாரி கொழும்பில் இருப்பார்.

தகவல் நாம் பெற முயலும்போது பொறுப்பதிகாரி எங்கே இருக்கின்றாரோ முதலில் அவரிடம்தான் நாம் தகவல்பெற முயல வேண்டும்.

நீங்கள் தகவல் கேட்கும்போது நீங்கள் ஏன் இந்த தகவலை கேட்கின்றீர்கள் என்று எந்த தகவலையும் நாம் கேட்பதில்லை.

ஆனால் தகவல் வழங்கின்ற அதிகாரிகளிடம் ஏன் நீங்கள் தகவலை வழங்க மறுக்கின்றீர்கள் என கேட்போம். அவர்கள் இதற்கு நியாயப்படுத்தாவிட்டால் நாம் அவர்களுக்கு ஆணையிடுவோம் தகவலை கொடுங்கள் என்று

இதற்காக நீங்கள் எந்தவித பணமும் எதற்கும் செலவழிக்க தேவையில்லை. படிவமும் உங்களுக்கு இலவசமாகவே வழங்கப்படும்.

இவர்கள் கேட்கும் தகவலை தரமுடியாது என பொது அதிகார சபை தெரிவிக்கும் பட்சத்தில் நீங்கள் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய முடியும்.

உங்கள் மேன் முறைப்பாட்டை விசாரிப்பதற்கு நீங்கள் கொழும்புக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று விசாரனை மேற்கொள்ளுகின்றோம்.

வேறு மாவட்டங்களிலிருந்து மேன்முறையீடுகள் வருகின்றபோது மன்னாரிலிருந்து எந்தவித முறைப்பாடுகளும் எமக்கு வருவதில்லை. இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது மன்னார் மக்களுக்கு தகவல் அறியும் சட்டம் சரியாக தெரியாது அல்லது நீங்கள் தகவல் கேட்கும்போது உங்களுக்கு தகவல் கிடைக்கப் பெறுகின்றது என தோன்றுகின்றது.

அல்லது உங்களுக்கு சந்தேகம் தோன்றுகின்றது இந்த ஆணைக்குழுவுக்கு சென்றால் எந்தவித பிரயோசனமும் இல்லையென்று நீங்கள் நினைக்கலாம் என இவ்வாறு தெரிவித்தார்.

எந்த மேன்முறையீடுகளும் மன்னாரிலிருந்து இல்லை

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House