
posted 9th December 2021
டெங்கு பரவுவதற்கு முக்கிய காரணியாக இருப்பது, பரவலாகப் பெய்த கடும் மழையும், அதனால் வடிந்தோட முடியாத முடியாத தேங்கியுள்ள நீர் நிலைகளும் தான்.
இதனால், டெங்கு நுளம்புப் பெருக்கத்தை அடியோடு அழிப்பதற்கு இந்த வாரத்தில் வீதிகள்தோறும் சுகாதார பகுதியினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வேளையில் பொது மக்களையும் ஒத்துளைப்பு நல்குமாறு கேட்டு நிற்கின்றோம்.
இதன்போது பொது மக்களுக்கு தெரிவித்ததாவது;
இவ் விடங்களிலுள்ள ஐஸ் பெட்டிகள், போத்தல்கள், மூடிகள், சிரட்டைகள், இளநீர் கோம்பைகள், மூடியில்லா போத்தல்கள், பிளாஸ்ரிக் பைகள், றயர்கள் ரெஜிபோம் பெட்டிகள் போன்றவற்றில் நீர் தங்கியிருக்காது அவைகளை அகற்றும்படி வேண்டப்படுகின்றீர்கள்.
உங்கள் இல்லங்களில் இருக்கும் குளிரூட்டியின் பின்புறத்தில் இருக்கும் தட்டில் நீர் தேங்கியிருக்குமாகில் அவைகளையும் அடிக்கடி துப்பரவு செய்து கொள்ள வேண்டும்.
இம்முறைகளைத் தவறாது கவனித்து வந்தால் டெங்கு நுளம்பிலிருந்து உங்களையும், உங்கள் குடும்பம், சமூகத்தை டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறும் வேண்டப்படுகின்றீர்கள்.
இது உங்களுக்கு இப்பொழுது அறிவுறுத்தலாக அமையப் பெற்றிருக்கின்றபோதும் செவ்வாய் கிழமை (10.12.2021) ஒவ்வொரு வீடுகளுக்கும் அதிகாரிகள் விஐயம் செய்து நுளம்பு உற்பத்தியாகும் இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கைகளுக்கு நீங்கள் உட்படுத்தப்படுவீர்கள் என்பதையும் அறியத் தருகின்றோம் என எச்சரிக்கை கொண்ட விளம்பரம் வீதிகள்தோறும் சுகாதார பகுதினரால் வழங்கப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House