
posted 6th December 2021
இந்நாட்டு முஸ்லிம்களை பாரம்பரிய முஸ்லிம்கள், பாரம்பரியமற்ற முஸ்லிம்கள் என இரண்டு பிரிவாக வேறுபடுத்திக் காட்டுவதற்கு சிலர் முயற்சித்துக்கொண்டி ருக்கின்றார்கள். அதற்காகத்தான் “ஒரு நாடு ஒரு சட்டம்” என்ற செயலணியொன்றை அமைத்துக் கொண்டு மாவட்டம் மாவட்டமாக கூட்டம் நடத்தி திரிகின்றார்கள். இந்த விவகாரம் பெரும்பான்மை சமூகத்தவரிடத்திலும் கூட பலத்த கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் எழுதிய, இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளா்கள் பற்றிய ஆய்வு நூலான 'திதுலன தாரக்கா' (மின்னும் தாரகை), சனிக்கிழமை (04) , கொழும்பு அல்–ஹிதாயா தேசியப் பாடசாலை பஹார்தீன் கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்ட போது , பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது,
இலங்கைப் பெண்கள் மத்தியில் சிறந்த படைப்பாளிகள் இருக்கின்றார்கள் என்ற விடயத்தை நாடறிய செய்ய வேண்டுமென்ற நோக்கில் இந்த தொகுப்பை வெளியிட்டுள்ள நூறுல் அயின் சாமான்யமான பெண்ணொருவர் அல்லர். அவருடைய முழுக் குடும்பத்தையும் “கலைக் குடும்பம்” என்றழைக்கலாம். கண்டி மாவட்டத்தில் உடுதெனிய என்ற ஊரைச் சேர்ந்த அவர், மொழிப் புலமை என்ற வகையில் சிங்களத்திலும், தமிழிலும் ஒரு சேர திறமை வாய்ந்தவர். அந்தக் கிராமத்தில் புகழ் பூத்த குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.
இந்நாட்டு அரசாங்கத்தின் ஊடகங்களின் தொடர்பாடல் விடயத்தில் முக்கியமான இலங்கை தகவல் திணைக்களத்தில் அவர் நீண்ட காலமாக பணியாற்றியிருக்கிறார். கொழும்பு மாவட்ட செயலகத்திலும் நூறுல் அயின் ஊடகத்துறையில் கடமையாற்றியுள்ளார். அவரது வெற்றியில் மிக முக்கிய பங்குதாரரானஅவரது கணவர் நஜ்முல் ஹுஸைன் நல்ல இலக்கியவாதியும், சிறந்த கவிஞருமாவார்.
இந்த நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் காதர் மொகிதீன் கலந்து சிறப்பிப்பதும் சாலப் பொருத்தமானதும்,மகிழ்ச்சிக்குரியதுமாகும்.
பெண் படைப்பாளிகள் என்ற விடயத்தில், எழுத்தாளர் சம்மேளனத்தின் செயலாளர் கமல் பெரேரா இங்கு கூறியவாறு, பெண் எழுத்தாளர்களுக்கு எல்லைச் சுவர் எழுப்புவதில் ஆண்கள் முண்டியடித்துக்கொண்டு தருகின்ற அவஸ்த்தையென்பது சங்கடமான விடயமாகவுள்ளது. அது மட்டுமல்லாது, உலமாக்கள் சிலரும், பள்ளிவாசல் நிருவாகங்களும் தலையிட்டு இவ்விடயம் தொடர்பில் “பத்வா”(மார்க்கத் தீர்ப்பு) வழங்குகின்ற விவகாரம் என்னைப் பொறுத்தமட்டில் மாறிவரும் இன்றைய சூழலில் முஸ்லிம் சமூகம் சம்பந்தமான தவறான பார்வையை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, எங்களது சமூகத்திலுள்ள பெண்களின் படைப்பாற்றலை ஊனப்படுத்துகின்ற செயலாகவும் அமைந்துவிடுவதை நான் பார்க்கின்றேன். தேவையற்ற இந்த தலையீடு என்ற விவகாரம் மிகவும் வேதனைக்குரியது. அவ்வாறு பெரும்பான்மையின சகோதரரான அவர் கூறுவதை அவரது புரிதலின் அடிப்படையிலேயே நாம் எடுத்து நோக்க வேண்டியுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House