
posted 13th December 2021
சுண்டிக்குளம் இயற்கை பூங்கா சுற்றுலா விடுதி திறப்பு விழாவும், போரின் போது இரு கைகளையும் இளந்த பெண்ணோருவருக்கு கணணிகள் வழங்கும் நிகழ்வு சுண்டிக்குளத்தில் அமைந்துள்ள "நச்சுறல் பாக்கில்" திங்கட்கிழமை (13) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.
வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் இயற்கை பூங்கா, வனவள ஜீவராசிகள் பகுதிக்குள் உள்ள சுற்றுலா விடுதி மீள் புனர் நிர்மானம் செய்யப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.
இதன் போது போரின் போது இரு கைகளையும் இழந்து வெற்றிலைக்கேணி பகுதியில் கணிணி பயிற்சியை வழங்கி வரும் பெண்ணொருவருக்கு கொமெர்ஷல் வங்கியின் அனுசரனையுடன் 5 கணிணிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு இயற்கை பூங்காவின் சுற்றுலா விடுதியை திறந்து வைத்ததுடன் கணிணிகளையும் வழங்கி வைத்தார்.


எஸ். தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House