இந்திய  முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத்  மறைவு - பிரதமர் இரங்கல் செய்தி

இந்திய முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவர்களின் மறைவு குறித்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.

இந்திய முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவரது பாரியார் மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் புதன்கிழமை (08) இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தமை தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

ஜெனரல் பிபின் ராவத் அவரது பாரியார் உள்ளிட்ட பதினான்கு பேர் பயணித்த ஹெலிகொப்டர் தமிழ்நாட்டில் விபத்துக்குள்ளாகியது.

இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த அனைவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், உறவினர்களுக்கும் இலங்கை அரசாங்கத்தினதும், மக்களினதும் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.

இந்திய-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பெரும் பங்களிப்பை வழங்கிய ஒரு நண்பர் என்ற வகையில் ஜெனரல் பிபின் ராவத் அவர்களது நினைவு மிக நீண்டகாலமாக நிலைத்திருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார் என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்திய  முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத்  மறைவு - பிரதமர் இரங்கல் செய்தி

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House