
posted 21st December 2021
பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையிட்டு தப்பிக்க முனைந்த பெண்ணையும் அவரின் தந்தையையும் மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த இருவரும், பெண்ணின் தோட்டுக்காக காதையும் சேர்த்து அறுத்துக் கொண்டு தப்பியோட முனைந்திருந்தனர் என்றும் அறிய வருகின்றது.
மட்டக்களப்பு நகர பார் வீதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் செல்வராஜா தயாவதி (வயது - 47) என்பவரே உயிரிழந்ததார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
அந்த வீட்டில் உயிரிழந்த பெண்ணுடன் கணவரும் மகளும் வாழ்ந்துள்ளனர். அந்த வீட்டில் பணியாாற்றிய பெண் தனது கஷ்டம் குறித்து உயிரிழந்த பெண்ணுக்கு தனது தந்தையுடன் சென்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து மதிய உணவை உண்ட வீட்டு உரிமையாளரான பெண்ணும் மகளும் உணவருந்தி விட்டு தங்களின் அறைகளுக்கு நித்திரை கொள்வதற்காக சென்றுள்ளனர்.
இதன்போது, பணிப் பெண்ணையும் அவரின் தந்தையையும் உணவருந்தி விட்டு செல்லுமாறு வீட்டு உரிமையாளர் கூறியுள்ளார். அந்தச் சமயத்தில் பெண்ணின் கழுத்தை வெட்டியவர்கள் கைகளையும் துண்டுகளாக்கினர். அத்துடன், அவரின் கழுத்தில் இருந்த தங்க நகைகளை எடுத்தவர்கள், தோட்டை அபகரிப்பதற்காக காதுடன் அறுத்து தமது பையில் போட்டுக் கொண்டு முச்சக்கர வண்டியில் தப்பியோட முனைந்தனர்.
இவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அவர்களை மடக்கிப் பிடித்தனர். இதன்போது, பெண் கொல்லப்பட்ட விடயமும் வெளித்தெரிந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கைதான பெண் திருமணமானவர் என்றும், இருவரும் வாழைச்சேனைப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House