
posted 21st August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வைத்தியரின் கவலையீனம் - வவுனியா வைத்தியசாலையில் பிறந்த குழந்தை இறந்தது
வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவரின் அலட்சியத்தினால் தனது குழந்தை இறந்துள்ளதாக, குழந்தையின் தந்தையினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் கர்பிணித் தாய் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்தியர் ஒருவரின் அலட்சியத்தினால் குழந்தை இறந்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது மனைவி பிரவசத்திற்காக கடந்த 17 ஆம் திகதி வவுனியா வைத்தியசாலையின் 7ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டதாகவும், மறுநாள் அவருக்கான மருந்துகள் வழங்கப்பட்ட நிலையில் பிறந்த சிசு உயிரிழந்துள்ளதாகவும் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்டுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரனவை தொடர்பு கொண்டு வினவியபோது, சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)