
posted 20th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
விடுதியில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் கைது
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான முறையில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில், மாவட்ட செயலகத்துக்கு சற்று தொலைவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஆள் நடமாட்டம் உள்ளதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த விடுதிக்கு பொலிஸார் சென்று சோதனையிட்டனர்.
அதன்போது, விடுதியில் எவ்வித பதிவுகளும் இன்றி தங்கியிருந்ததுடன், தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய மூன்று யுவதிகளை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட யுவதிகளை விசாரணைகளின் பின்னர் யாழ். நீதவான் முன்னிலையில் முற்படுத்தியவேளை, அவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், மூவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)