
posted 16th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வவுனியா, உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின்போது மாம்பழமொன்று 2,85,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (13) மாம்பழத் திருவிழா நடைபெற்றது.
இதன்போது விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழமொன்றே ஆலயத்தின் வளர்ச்சி நிதிக்காக இவ்வாறு ஏலத்தில் விடப்பட்டது.
இந்நிலையில் பலத்த போட்டிக்கு மத்தியில் குறித்த மாம்பழத்தை உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ஒருவர் 2,85,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)