வவுனியா பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வவுனியா பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் திங்கட்கிழமை (29) அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த வியாழக்கிழமை வவுனியா பம்பைமடு பகுதியில் அஸ்வெசும திட்டத்திற்கான பெயர்ப் பதிவுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு வருகை தந்த பொதுமகன் ஒருவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியமைக்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அரச உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்பை வழங்கு, அவர்கள் தங்கள் கடமைகளை செய்ய விடு போன்ற கோஷங்கள் எழுப்பியவாறும் பதாகைகளை தாங்கியவாறும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

வவுனியா பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)