
posted 1st August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ரி - 56 துப்பாக்கிகளுடன் இஸ்லாமிய மதகுரு கைது
ரி -56 ரக துப்பாக்கிகள், அவற்றுக்கான ரவைகள், வாள் போன்றவற்றுடன் இஸ்லாமிய மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை 30ஆம் திகதி இரவு மட்டக்களப்பு - வாழைச்சேனை - பதுறியா நகரில் வைத்து விசேட அதிரடிப் படையினர் அவரை கைது செய்தனர்.
பொலநறுவை இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அதிரடிப்படை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய இந்தக் கைது இடம்பெற்றது.
நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் மௌலவியின் இல்லத்தை விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைத்தனர். இதையடுத்து, நடத்தப்பட்ட சோதனையில் அந்த வீட்டிலிருந்து 2 ரி - 56 ரக துப்பாக்கிகள், 59 ரவைகள், 2 மெகசீன்கள், ஒரு பைனகுலர், ஒரு வாள் என்பன கைப்பற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து மௌலவி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவரை கொழும்பு பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)