
posted 22nd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழில் கடும் காற்றால் 3 குடும்பங்கள் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் நேற்று (21) புதன்கிழமை வீசிய கடும்காற்றால் மூன்று குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அத்துடன், கோயில் ஒன்றும் மரம் விழுந்ததில் சேதமடைந்தது.
நேற்று வீசிய கடும்காற்றால் குருநகர் - ஐந்து மாடி குடியிருப்பில் கூரை பறந்ததில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 11 பேர் பாதிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மனிதாபிமான உதவிககளை வழங்கியது.
இதேவேளை, பருத்தித்துறை - புலோலி மேற்கில் நாகதம்பிரான் கோயில்மீது பனைமரம் முறிந்து விழுந்ததில் அது சேதமடைந்தது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)