
posted 23rd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மன்னாரில் மாபெரும் மீனவர் போராட்டத்திற்க்கு அழைப்பு
மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து மாபெரும் போராட்டம் ஒன்றினை எதிர்வரும் 10/09/2024 அன்று முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம் அறிவித்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் (23) வெள்ளிக்கிழமைஇடம் பெற்ற வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொதுக்கூட்டதிலேயே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் பிரச்சினை, உள்ளூர் இழுவைமடி பிரச்சினை, தடை செய்யப்பட்ட மீன்பிடி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கட்டுப்படுத்தக் கோரியே இப் போராட்டம் நடாத்தப்படவுள்ளது.
இதே வேளை வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்திற்கு புதிய நிருவாகமஹ தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் தலைவராக கிளிநொச்சி மாவட்ட மீனவ பிரதிநிதி ஜோசப் பிரான்சிஸ் அவர்களும், செயலாளராக மன்னார் மாவட்டத்திலிருந்து மீனவ பிரதிநிதி முகமட் ஆலம் அவர்களும், பொருளாளராக யாழ்ப்பாணத்திலிருந்து திருமதி பிரியா அவர்களும் தெரிவு செய்யப்பட்டதுடன், உப தலைவராக முல்லைத்தீவு பிரதிநிதி திரு. தணிகாசலம் அவர்களும், உப செயலாளர் மன்னார் மாவட்டத்திலிருந்து திருமதி றீற்ரா வசந்தி அவர்களும் தெரிவு செய்யப்பட்டதுடன் மாவட்ட தலைவர்களாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து இ. முரளிதரன், கிளிநொச்சியிலிருந்து திரு. அமலதாஸ், மன்னார் மாவட்டத்திலிருந்து திரு அன்ரனி சங்கர், முல்லைத்தீவு அ. நடனலிங்கம், ஊடக பேச்சாளராக அன்னலிங்கம் அன்னராசா உட்பட 16 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 56 பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், பிரதம அழைப்பாளராக கலாநிதி சூசைதாஸன் அவர்களும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க தேசிய அமைப்பாளர் கேர்மன் குமார ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)