
posted 21st August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் தீ மிதிப்பு விழா
கோண்டாவில் மேற்கு மகா கணபதி பிள்ளையார் கோயிலில் தீ மிதிப்பு திருவிழா நேற்று முன்தினம் (19) திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்த ஆலயத்தின் பெருந்திருவிழா கடந்த 09ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று முன்தினம் தீர்த்த உற்சவத்துடன் நிறைவடைந்தது. பெருந்திருவிழா நிறைவு நாளில் பல வருடங்களாக தீ மிதிப்பு திருவிழா நடைபெறுவது வழமை.
இந்தத் திருவிழா நேற்று முன்தினம் வெகுசிறப்பாக பெருமளவு பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. இதில், பெருமளவு பக்தர்கள் தீ மிதித்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)