posted 16th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நாகையிலிருந்து காங்கேசனை வந்தடைந்தது சிவகங்கை படகு
நாகபட்டினத்திலிருந்து (நாகை) 41 பயணிகளுடன் சிவகங்கை படகு இன்று (16) வெள்ளிக்கிழமை மாலை காங்கேசன்துறையை வந்தடைந்தது.
இன்று (16) நண்பகல் 12 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து பயணத்தைத் தொடங்கிய சிவகங்கை படகு இன்று (16) மாலை 5 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.
யாழ்ப்பாணம் வந்த பயணிகளை யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் முரளி விஜய் உள்ளிட்ட குழுவினர் காங்கேசன்துறை துறைமுகத்தில் வரவேற்றனர்.
இந்தப் படகில் சிவகங்கை படகு சேவையின் உரிமையாளர் நிரஞ்சன் நந்தகோபனும் வருகை தந்திருந்தார்.
சிவகங்கை படகு இன்று சனிக்கிழமை காலை காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து நாகபட்டினத்துக்கு பயணத்தை ஆரம்பிக்கும்.
நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் காலை 8 மணிக்கு நாகபட்டினத்திலிருந்தும் பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்தும் சிவகங்கை படகு பயணிக்கும் என்று படகு சேவையை நடத்தும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி
எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)