
posted 13th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நாகபட்டினம் - காங்கேசன் கப்பல் சேவை தாமதமாகும்
தமிழ்நாட்டின் நாகபட்டினம் (நாகை) - காங்கேசன்துறை துறைமுகங்களுக்கு இடையிலான கப்பல் சேவை ஆரம்பமாவது மீண்டும் தாமதமடைந்துள்ளது.
நாகபட்டினம் - காங்கேசன்துறை துறைமுகங்களுக்கு இடையிலான கப்பல் சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்தக் கப்பல் சேவை ஆரம்பமாவது தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசனப் பதிவுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையத்தளத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு மற்றும் சீரற்ற காலநிலையே சிவகங்கை கப்பல் தாமதமாகக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை கப்பல் கடந்த சனிக்கிழமை (10) பரீட்சார்த்த முயற்சியாக காங்கேசன்துறை துறைமுகத்துக்கு வந்து திரும்பியிருந்தது.
முன்னதாக, நாகபட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவையை கடந்த ஆண்டு ஒக்ரோபர் 14ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி மெய்நிகர் வழியே தொடக்கி வைத்தார். வடகிழக்கு பருவ மழை மற்றும் புயல் என்பவற்றை காரணம் காட்டி ஓரிரு சேவைகளுடனேயே இந்தக் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)