நற்பிட்டிமுனை தமிழர் பிரதேசம் என்பதால் வீசப்படுகின்ற விலங்கு கழிவுகள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

நற்பிட்டிமுனை தமிழர் பிரதேசம் என்பதால் வீசப்படுகின்ற விலங்கு கழிவுகள்

அம்பாறை, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை குளப்பகுதியில் தினமும் ஆடு, மாடு மற்றும் கோழிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அந்தப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இது தமிழர் பிரதேசம் என்பதால் இந்த பாராமுகமா? அல்லது புறக்கணிப்பா? என்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறிப்பாக தாளவெட்டுவான் சந்தியிலிருந்து நற்பிட்டிமுனை நோக்கிச் செல்லும் பழைய இலங்கை மின்சார சபை வீதியின் இடப்பக்கமுள்ள குளக்கரையில் தினமும் இவ்வாறு விலங்குகளின் உடல் கழிவுகள் இனந்தெரியாதோரால் கொட்டப்பட்டு வருவது அதிகரித்துள்ளது.

இதனால் அந்தப் பகுதியிலுள்ள மக்கள் வாழ முடியாதவாறு பெரிதும் அசௌகரியத்துக்குள்ளாகி உள்ளனர். இதனால் அந்த சூழலும் பாதிக்கப்பட்டு மாசடைந்து வருகின்றது. அதேநேரம் பொது மக்களுக்கு தொற்று நோய்களையும் உருவாக்கி விடுகின்ற நிலைமையும் காணப்படுகின்றன.

இதனை அந்தப் பகுதி குடியிருப்பாளர்கள் பல தடவைகள் கல்முனை மாநகர சபையிடமும், பொதுச் சுகாதார பரிசோதகரிடமும் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்று மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

காகங்கள் கழிவுகளை அக்கம் பக்கத்திலுள்ள குடியிருப்புகளில் உள்ள கிணறுகளில் போடுகின்றன. நாய்களும் அசுத்தப்படுத்துகின்றன. இவ்வாறு கழிவுகள் வீசப்படுவதை தடுப்பதற்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுக்குமா? அல்லது இப்படியே பார்த்துக்கொண்டு இருப்பார்களா? என்று பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

நற்பிட்டிமுனை தமிழர் பிரதேசம் என்பதால் வீசப்படுகின்ற விலங்கு கழிவுகள்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)