
posted 17th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தென்கிழக்கு பல்கலை. கலைப்பீட பீடாதிபதியாக பாஸில் மீள தெரிவு
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பப் பீடங்களுள் ஒன்றாக விளங்கும் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் கலாநிதி எம். எம். பாஸில் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவரின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் புதிய பீடாதிபதியைத் தெரிவு செய்யும் கூட்டம் பதில் துணைவேந்தர் யூ. எல். அப்துல் மஜீட் தலைமையில் பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் உயர் சபை உறுப்பினர்கள், பதில் பதிவாளர் எம். ஐ. நௌபர், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம். ரீ. அஹமட் அஷ்ஹர் மற்றும் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் ஏ. ஆர். எம். சுல்பி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி வெற்றிடத்துக்காக பேராசிரியர் பாஸில் போட்டியிட்டிருந்தார். இதில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று பேராசிரியர் பாஸில் மீண்டும் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். பேராசிரியர் பாஸில், கடந்த 2021. 08. 16 ஆம் திகதி எட்டாவது பீடாதிபதியாக போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், கலை கலாசார பீடத்தின் பழைய மாணவரான பேராசிரியர் எம். எம். பாஸில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அந்தப் பீடத்தின் பீடாதிபதியாக மீண்டும் செயல்படவுள்ளார்
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)