தமிழ்ப் பொது வேட்பாளர் சுயேச்சையாகவே போட்டி - சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவிப்பு

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

தமிழ்ப் பொது வேட்பாளர் சுயேச்சையாகவே போட்டி - சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவிப்பு

தமிழ்ப் பொது வேட்பாளர் சுயேச்சையாகவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்று பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஈ. பி. ஆர். எல். எவ். தலைவருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பொது வேட்பாளராக பா. அரியநேத்திரன் நேற்று அறிவிக்கப்பட்டார். இது தொடர்பில் அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது. இதில், கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், தமிழ்ப் பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு 75 முதல் 80 பேரின் பெயர்களை பரிசீலித்தே அரியநேத்திரனை தெரிவு செய்துள்ளோம். இலங்கை தமிழ் அரசு கட்சியை சேர்ந்த பலரும் எமக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். கட்சியின் முடிவு ஓரிரு நாட்களில் வெளிவரும் என நம்புகிறோம். நாம் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைந்து பயணிக்கவே விரும்புகிறோம். எம்முடன் இணைந்து பயணிக்க விரும்புவோர் பயணிக்க முடியும்.

எமது பொது வேட்பாளர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் என்பதனால் சுயேச்சையாக போட்டியிட முடியும். அதனால், அவர் சுயேச்சையாகவே போட்டியிடுகிறார். இன்னமும் ஓரிரு நாட்களில் வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை செலுத்துவோம் என்றார்.

எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

தமிழ்ப் பொது வேட்பாளர் சுயேச்சையாகவே போட்டி - சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவிப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)