
posted 18th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழ் அரசுக் கட்சிக்கு மீளவும் தலைவர் தெரிவு
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் சபையை கூட்டி யாப்பின்படி மீண்டும் தலைவர், செயலாளர் தெரிவுகளை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் எம். பி. தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிமீதான வழக்குகளை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நேற்று ஞாயிறு வவுனியாவில் தனியார் விடுதியில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன என்று கட்சியின் பேச்சாளர் பின்னர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் நிலையில், எமது மக்களுக்கு வழிகாட்டுவதற்காக ஆவணம் ஒன்றைத் தயாரிக்கவுள்ளதாகவும் இதன்போது சுமந்திரன் குறிப்பிட்டார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)