ஜனாதிபதித் தேர்தல் போட்டிக் களத்தில் 39 வேட்பாளர்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஜனாதிபதித் தேர்தல் போட்டிக் களத்தில் 39 வேட்பாளர்கள்

எதிர்வரும் செப்ரெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய 40 பேரில் 39 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதனால், வரும் ஜனாதிபதித் தேர்தலில் 39 பேர் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சுயேச்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய சரத் குமார குணரத் என்பவரே வேட்புமனு பத்திரத்தை சமர்ப்பிக்கவில்லை.

அங்கீகரிக்கப்பட்ட 39 வேட்பாளர்களில் 22 பேர் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களாகவும், ஒருவர் ஏனைய அங்கீகரிக்கப்படாத கட்சியை சேர்ந்தவராகவும், 16 பேர் சுயேச்சை வேட்பாளர்களாகவும் தகுதி பெற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வேட்புமனு தாக்கலின் பின்னர் நேற்று (15) தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நடத்திய ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

மேலும், வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. அனைவருக்கும் நன்றி. நீதியான முறையில் தேர்தலை நடத்த வேட்பாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். தாக்கல் செய்யப்பட்ட 39 வேட்பு மனுக்களில் 3 வேட்பு மனுக்கள் மீது முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.

சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறான மற்றும் வெறுப்பூட்டும் சித்தரிப்புகளுடனான பிரசாரங்களை மேற்கொள்வதை அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் விசேட சலுகை வழங்கும் ஊடகங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்.

வேட்பாளர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தேர்தல் பிரச்சாரங்களுக்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் கூறினார்.


எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஜனாதிபதித் தேர்தல் போட்டிக் களத்தில் 39 வேட்பாளர்கள்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)