
posted 9th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கடும் காற்றால் நிக்கதியாக்கப்பட்ட மூன்று குடும்பங்கள்
சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம், கல் விளான் பகுதியில் நேற்றுமுன்தினம் (07) புதன்கிழமை இரவு வீசிய கடும் காற்றால் ஒரு வீட்டின் கூரை தூக்கி எறியப்பட்டதையடுத்து, மூன்று குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன.
மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் அந்த வீட்டில் வசித்துவந்த நிலையில், இந்த அனர்த்தம் காரண மாக, அவர்கள் சுழிபுரம் திருவடிநிலை சைவத் தமிழ்க் கலவன் பாடசாலையில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அசம்பாவிதம் இடம்பெற்ற வீட்டிலிருந்த குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி