கடற்படை படகு மோதியதில் இந்திய மீனவர் மூழ்கிப் பலி

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கடற்படை படகு மோதியதில் இந்திய மீனவர் மூழ்கிப் பலி

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்ய முயன்றபோது கடற்படை படகு மீனவர் படகை மோதியதில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மீனவரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

நேற்று (01) வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,

நெடுந்தீவு கடற்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய படகை அவதானித்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்வதற்காக சென்றபோது கடற்படை படகு மோதியதில் மீனவர்களின் படகு கவிழ்ந்தது.

இதில், படகிலிருந்த 5 மீனவர்களும் கடலில் வீழ்ந்தனர். மூன்று மீனவர்கள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டனர். எனினும் ஒரு மீனவர் மூழ்கி உயிரிழந்தார். இராமேஸ்வரத்தை சேர்ந்த மலைச்சாமி (வயது 59) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இதேநேரம், மற்றொருவர் காணாமல் போனார். அவரைத் தேடும் நடவடிக்கை தொடர்வதாக கடற்படையினர் தெரிவித்தனர். இந்தத் தேடுதல் நடவடிக்கையில் இந்திய கடற்படையின் கப்பலும் ஹெலிகொப்டரும் ஈடுபட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

உயிரிழந்த மீனவரின் சடலம் புங்குடுதீவு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை, கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய முற்பட்டவேளை இலங்கை கடற்படை சிப்பாய் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

கடற்படை படகு மோதியதில் இந்திய மீனவர் மூழ்கிப் பலி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)