
posted 21st August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஐஸ் போதை விற்ற 15 பேர் உட்பட 59 பேர் பொலிஸாரிடம் சிக்கினர்
மட்டக்களப்பு, காத்தான்குடியில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையாளர்கள் 15 பேர் உட்பட 59 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யுக்திய போதை ஒழிப்பு திட்டத்தின் கீழ் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே ஐஸ் போதை, கசிப்பு விற்பனை மற்றும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்கா தெரிவித்தார்.
ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 15 பேர் 350 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி, கசிப்பு விற்பனை மற்றும் வீடு உடைத்தல் மற்றும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட 44 பேரும் அடங்கலாக 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)