
posted 2nd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்
சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (01) வியாழக்கிழமை நடைபெற்றது.
யாழ். ஊடக அமையத்தில் அந்த அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தலில் நிலக்சனின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01ஆம் திகதி அவரது வீட்டுக்கு அதிகாலை 5 மணியளவில் சென்ற ஆயுததாரிகள் நிலக்சனை வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப் படுகொலை செய்தனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)