
posted 19th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மையை வெளிப்படுத்துவோம் - சஜித்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மக்கள் எதிர்பார்த்துள்ளதுபோல உண்மைத்தன்மையை வெளிக்கொணர்வதற்கு நான் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியினர் அனைவரும் தயாராக இருக்கிறோம் என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட கத்தோலிக்க மதகுருக்களிடம் தெரிவித்தார் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ.
கொழும்பிலுள்ள ஆயர் இல்லத்துக்கு நேற்று (18) ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ சென்றார். கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் ஆயர்களிடம் ஆசீர்வாதம் பெற்ற அவர் கத்தோலிக்க குருமார்களிடம் மேலும் தெரிவித்தவை வருமாறு,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முறையான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையோடு நடைபெற்றனவா என்பது குறித்தே இந்த நாட்டில் உள்ள கத்தோலிக்கர்களும், ஒட்டுமொத்த மக்களும் எதிர்பார்த்திருக்கின்றனர். இதன் உண்மைத் தன்மை வெளிப்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் சிக்கல்கள் காணப்படுகின்றன. எனவே, இது தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு, கா்தினால் உள்ளிட்ட கத்தோலிக்க பேரவைக்கு தெளிவுபடுத்துவோம்.
அவ்வாறே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பின்னணி, அதன் உண்மைத்தன்மை என்பனவற்றை எந்தவித பேதமும் இன்றி கண்டறிந்து, அதனுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகபட்ச தண்டனையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் சஜித் உறுதியளித்தார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)