
posted 1st August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இந்திய மீனவர் உயிரிழப்பு
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவரை இலங்கை கடற்படையினர் கைது செய்ய முயன்றவேளை படகு கவிழ்ந்து அவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்தியா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகர் பிரியங்க விக்கிரமசிங்கவை நேரில் அழைத்து இந்திய வெளிவிவகார அமைச்சு தனது எதிர்ப்பு மற்றும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
துரதிஷ்டவசமான இந்த உயிரிழப்பு குறித்து எங்கள் அதிர்ச்சியையும் வேதனையையும் வெளிப்படுத்துகின்றோம் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஸ் ஜா இந்த விவகாரம் குறித்து இன்று இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுகளை நடத்தவுள்ளார் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)