
posted 21st August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அறுகம்குடா அரை மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட அரை மரதன் ஓட்டப்போட்டியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
அறுகம்குடா அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்து பொத்துவில் அறுகம்குடா பிரதேசத்தில் நடத்திய அரை மரதன் ஓட்டப்போட்டியின் 21. 1 கிலோ மீற்றர் போட்டியில் ஆண்கள் பிரிவில் விமல் காரியவசம் முதலாமிடத்தையும், ரி. ரத்னபால இரண்டாமிடத்தையும், டென்மார்க்கை சேர்ந்த பெஸ்டியன் குலோஸ்கோ மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டார். பெண்கள் பிரிவில் கென்யாவைச் சேர்ந்த அனிக்கா பேலிம் முதலாமிடத்தையும், ஜேர்மனியை சேர்ந்த டீ. அனிக்கா டோன் இரண்டாமிடத்தையும், அவுஸ்திரேலியாவை சேர்ந்த சஸாலி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
குறித்த மரதன் ஓட்டப்போட்டி 21.1 கிலோ மீற்றர் அரை மரதன், 10 கிலோமீற்றர் மற்றும் 5 கிலோமீற்றர் என மூன்று பிரிவுகளாக இடம்பெற்றது. 5 கிலோமீற்றர் போட்டியில் சிறுவர்கள் மாத்திரம் கலந்துகொண்டனர். ஏனைய இரு பிரிவுகளிலும் பிரபல மரதன் ஓட்ட வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அறுகம்குடா அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் இஸட். எம். ஹாஜித் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். எம். முஷாரப் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
குறித்த மரதன் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களுக்கு பணப் பரிசில்களுடன் பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. அறுகம்குடா அபிவிருத்தி போரம் 6ஆவது தடவையாக நடத்திய இந்த மரதன் ஓட்டப்போட்டியில் உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் என 260 பேர் பங்குபற்றினர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)