
posted 23rd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வவுணதீவில் காட்டு யானையால் நாசமாக்கப்பட்ட நெல் களஞ்சியசாலை
மட்டக்களப்பு, வவுணதீவில் காட்டு யானையால் நெல் களஞ்சியசாலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. சிறுபோக வேளாண்மை அறுவடை முடிந்த கையோடு அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்த வாரத்துக்குள் மட்டும் பல உயிர்கள் காட்டு யானைகளால் காவு கொள்ளப்பட்டதுடன், குடியிருப்புகள், பயன்தரும் மரங்கள் மற்றும் உடைமைகளுக்கும் பலத்த சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாகவே மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரவெட்டி கிராமத்துக்குள் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த காட்டு யானை, தனியாருக்கு சொந்தமான நெல் களஞ்சியசாலையின் சுவரை உடைத்து அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நெல் மூடைகளையும் சேதப்படுத்தியுள்ளது.
இதேவேளை, இந்த காட்டு யானை அந்தப் பிரதேசத்தில் இருந்த பயன்தரும் தென்னை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் குறித்த காட்டு யானையை வேறு இடத்துக்கு துரத்தியதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)