
posted 7th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வரலாற்றில் முதல் தடவையாக மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர விழா
வரலாற்றில் முதல் தடவையாக நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி சிறீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா நாளை புதன்கிழமை (07) சிறப்பாக நடைபெறவுள்ளது.
ஆலய பிரதம குரு சிவ சிறீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் முன்னிலையில் ஆலய குரு சிவ சிறீ ச. கோவர்த்தன சர்மா தலைமையில் ஆடிப்பூரத் திருவிழா நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக ஆலய பரிவான சபைத் தலைவர் கலாநிதி கே. ஜெயசிறில் தெரிவித்தார். இதேவேளை, நாளை மறுதினம் (08) வியாழக்கிழமை நாக சதுர்த்தி விசேட பூஜையும் நடைபெறவுள்ளது.
அத் தருணம் கொக்கு மந்தாரை நீல காக்கணம்பூ, பால் போன்ற நைவேத்தியங்களை கொண்டு வருமாறு பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்று ஆலய பரிபாலன சபையின் செயலாளர் த.சண்முகநாதன் தெரிவித்தார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)