
posted 16th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வவுனியாவில் ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழத்தின் விலை
வவுணதீவு - ஆயித்தியமலையில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணைந்த சமூக மட்ட அமைப்பின் ஏற்பாட்டில் பிரதேச பொதுமக்கள் நேற்று (18) வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்றது. இதில் அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தமிழ் கல்வி அபிவிருத்தி ஒன்றியம், சமூக மட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
திறக்கப்படவுள்ள மதுபானசாலையால் சமூகச் சீர்கேடுகள் அதிகரிக்கும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். போராட்டத்தின்போது, "மட்டக்களப்பின் அபிவிருத்தி, மதுபானசாலையா”, “அழிக்காதே அழிக்காதே கலாசாரத்தை அழிக்காதே”, “வேண்டாம் வேண்டாம் மதுபானசாலை வேண்டாம்” போன்ற கோசங்களை அவர்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் அரசாங்க அதிபர், மதுவரித் திணைக்கள அதிகாரி ஆகியோருக்கான மனு மண்முனை மேற்கு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)