
posted 2nd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மஞ்சள் கடத்தியவர்கள் கைது
புத்தளம், கற்பிட்டி - உச்சமுனை கடற்கரைப் பகுதியில் படகு மூலம் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட மஞ்சள் பொதிகளுடன் இருவர் புதன் (31) அன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கடல் மார்க்கத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காகக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 23 மற்றும் 44 வயதுடைய இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 749 கிலோ கிராம் மஞ்சள் (17 பொதிகள்) மற்றும் படகு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்கா சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)