
posted 20th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
புலிகள் தாக்கியபோது பயணித்த காருடன் பொன்சேகா பிரசாரம்
புலிகளின் தாக்குதலுக்கு இலக்கான காருடன் தனது முதல் பிரசாரக் கூட்டத்தை நடத்தியுள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா.
செப். 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் போட்டியிடுகிறார். சுயேச்சையாக போட்டியிடும் அவர் தனது முதல் பிரசார கூட்டத்தை கம்பஹாவில் நேற்று முன்தினம் (18) நடத்தினார்.
இந்தப் பிரசாரக் கூட்டத்துக்கே விடுதலைப் புலிகள் தன்மீது தாக்குதல் நடத்தியபோது தான் பயணித்திருந்த காரை அவர் கொண்டுவந்திருந்தார்.
2006 ஏப்ரல் 25ஆம் திகதி அப்போதைய இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா மீது கொழும்பில் கரும்புலி தாக்குதலை நடத்தியிருந்தனர். இந்தத் தாக்குதலில் அவரின் மெய்ப்பாதுகாவலர்கள் 9 பேர் உயிரிழந்தனர். சரத் பொன்சேகாவும் படுகாயமடைந்தார். இதனால், சுமார் 3 மாதங்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற நேர்ந்தது.
இந்த சம்பவத்தை நினைவுபடுத்தி வாக்குகளை ஈர்க்கும் நோக்கிலேயே அவர் இந்தக் காரை பிரசாரக் கூட்டத்துக்கு கொண்டு வந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)