
posted 17th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
புதுக்குடியிருப்பில் புலிகளின் புதையலை தேடி அகழ்வு பணி
யுத்த காலத்தில் விடுதலை புலிகள் ஆயுதங்கள் மற்றும் தங்கம் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியிலுள்ள தனியார் காணியில் நேற்று (16) வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, பொலிஸார், இராணுவத்தினர், கிராம சேவையாளர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸார் இணைந்து அகழ்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
பைக்கோ இயந்திரத்தின் உதவியுடன் நிலத்தில் பல மணிநேரம் அகழ்வு மேற்கொள்ளப்பட்டபோதும் ஆயுதங்களோ அல்லது வேறு எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தோண்டப்பட்ட இடங்களில் எதுவும் கிடைக்காததால், மீண்டும் தோண்டப்பட்ட இடங்களை மூட நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி தர்மலிங்கம் உத்தரவிட்டார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)