
posted 23rd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
புதிதாக காணிகள் கைவசப்படுத்துவதை இலங்கைப் படையினர் நிறுத்த வேண்டும்
இலங்கை இராணுவம் தன்வசம் வைத்திருக்கும் காணிகளை விடுவிப்பதுடன் புதிதாக காணிகளை கைவசப்படுத்;துதலை நிறுத்தவேண்டும் என என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள முழுமையான அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இலங்கை இராணுவம் தன்வசம் வைத்திருக்கும் காணிகளை விடுவித்தல், வடக்கு கிழக்கில் புதிதாக காணிகளை கைவசப்படுத்தலை நிறுத்துதல், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரைம் விடுதலை செய்தல், பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் நினைவேந்தல் முயற்சிகளில் ஈடுபடுவதையும் குற்றச்செயல்களில் இருந்து நீக்கி, அவர்களுக்கு ஆதரவளித்தல் போன்ற நம்பிக்கையை கட்டியெழுப்பும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நிலைமாற்றுக்கால நீதிக்கான சூழலை உருவாக்கவேண்டும் என்றுள்ளது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)