
posted 18th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பிறந்தநாளை முன்னிட்டு பல இலட்சம் பெறுமதியில் உதவிட்ட வித்தியானந்தன்
தனது 60 வது பிறந்தநாளை முன்னிட்டு தனியார் ஒருவர் பல இலட்சம் பெறுமதியில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் மற்றும் உதவிகளை மேற்கொண்டுள்ளார்.
கனடாவில் வதியும் T.J வித்தியானந்தன் எனும் பிரபல தொழிலதிபரே தனது 60வது பிறந்த நாளினை முன்னிட்டு முன்பள்ளி ஒன்றினை புணரமைத்து கொடுத்துள்ளதுடன், மூன்று தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களின் வீடுகளும் புணரமைத்து கொடுக்கப்பட்டதுடன் அல்வாய் கிழக்கு j/380 கிராம சேவகர் பிரிவில் பாரதி முன்பள்ளியினை மீள புனரமைப்பு செய்தும் இன்று (18) பிற்பகல் 4:00. மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
மேலும் நூற்றுக்கணக்கான தெரிவு செய்யப்பட்டவர்களிற்கு உலருணவு பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டது.
இதில் வடமராட்சியின் பல்வேறு பகுதியிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டுள்ளதுடன் நெல்லியடி பொலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி பொலீஸ் பரிசோதகர், கேமந்த ரோகண, யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பொறுப்பு அதிகாரி போலீஸ் பரிசோதகர் சேந்தன், உட்பட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)