
posted 22nd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நாவற்குடாவில் நள்ளிரவில் குடும்பஸ்தர் படுகொலை
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் நள்ளிரவில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
44 வயதுடைய குடும்பஸ்தரே வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
நேற்று முன்தினம் (20) நள்ளிரவில் நாவற்குடா பகுதியில் வீதியில் இவர் வந்து கொண்டிருந்த போது இனந்தெரியாதவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)