
posted 18th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அரசியல் தீர்வுக்கான ஆரம்பமாக 13 ஆவது திருத்தத்தை ஏற்கிறோம்
வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் ஓர் ஆரம்பமாக அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கின்றது என்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் அரசமைப்பில் உள்ள விடயமாகும். அது முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே எமது கட்சி உள்ளது. 2019 ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறித்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு - கிழக்கு இணைப்புத் தொடர்பில் பல கருத்துகள் உள்ளன. அப்பகுதிகளில் உள்ள கட்சிகளுக்கிடையில்கூட கருத்து முரண்பாடுகள் உள்ளன. எனவே, அது தொடர்பில் நாம் முடிவெடுக்கவில்லை. வடக்கு, கிழக்கு தற்போது தனித்தனி மாகாணங்களாகவே உள்ளன. இந்நிலையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாகவே 13 இருக்கின்றது. வடக்கில் உள்ள தமிழ்க் கட்சிகளும் 13 ஐ ஆரம்பத் தீர்வாக ஏற்றுள்ளன என்றார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)