அதிகாரப் பகிர்வு, பொறுப்புக்கூறலை புதிய ஜனாதிபதி மேம்படுத்தவேண்டும்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

அதிகாரப் பகிர்வு, பொறுப்புக்கூறலை புதிய ஜனாதிபதி மேம்படுத்தவேண்டும்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கும்,பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை மேம்படுத்துவதற்கும் தேவையான அடிப்படையான அரசியல் யாப்பு மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலை குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் முழுமையான அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;-

தேர்தல்களையடுத்து புதிதாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி ஒரு அவசர விடயமாக இலங்கை நாட்டுக்கென அனைவரையும் அரவணைக்கும், முன்னெடுக்கும் தேசிய நோக்கை முன்னெடுக்க வேண்டும்.

அத்தோடு முரண்பாடுகளுக்கான மூல காரணங்களை கவனத்தில் எடுத்து ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கும், அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை மேம்படுத்துவதற்கும் தேவையான அடிப்படையான அரசியல் யாப்பு மற்றும் நிறுவனரீதியான சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் என்பவற்றை அண்மித்திருக்கும் நிலையில், 2022ஆம் ஆண்டில் எதிர்ப்பு தெரிவித்த இலங்கையர்களின் அனைத்து தரப்புகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் பரந்துபட்ட தரப்பினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலைமாற்றுகால நீதிக்கான தன்னை மீண்டும் அர்ப்பணித்துக்கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்திருக்கின்றது.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் என்பவற்றை அண்மித்திருக்கும் நிலையில், 2022ஆம் ஆண்டில் எதிர்ப்பு தெரிவித்த இலங்கையர்களின் அனைத்து தரப்புகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் பரந்துபட்ட தரப்பினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலைமாற்றுகால நீதிக்கான தன்னை மீண்டும் அர்ப்பணித்துக்கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்திருக்கின்றது.

தேர்தல் காலத்துக்கு முன்னரும் தேர்தல் காலத்தின் போதும் அதன் பின்னரும் கருத்து சுதந்திரம், அமைப்புகளில் இணையும் சுதந்திரம் மற்றும் அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பவற்றிற்கான உரிமைகளை முழுமையாக பாதுகாத்து, அவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டிய பொறுப்பை அரசாங்கம் கொண்டுள்ளது.

போராட்டக்காரர்களுக்கு எதிரான மிதமிஞ்சிய அளவிலான அல்லது அநாவசியமான பலத்தை பிரயோகிப்பதை தவிர்த்துக்கொள்ளல், மத, பாலின ஏனைய விடயங்களின் அடிப்படையிலான, பிரிவினைவாத இயல்பிலான மற்றும் பாரபட்ச இயல்பிலான சொல்லாடல்கள் மற்றும் நடைமுறைகளை தடுத்தல், தேர்தல் தொடர்பிலான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை என்பவற்றை தடுத்தல் ஆகியவற்றை அது உள்ளடக்கியுள்ளது என்றுள்ளது.

எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

அதிகாரப் பகிர்வு, பொறுப்புக்கூறலை புதிய ஜனாதிபதி மேம்படுத்தவேண்டும்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)