வேலியே பயிரை மேய்கின்றனவா?

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வேலியே பயிரை மேய்கின்றனவா?

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வளங்கள் மோசடியான முறையில் சூரையாடப்படுகின்றன. இதை நிறுத்துவது யார்? வேலியே பயிரை மேய்கின்றனவா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் - இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஈ.பி.ஆர்.எல்.எப்.இரா துறைரெத்தினம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வருடங்களாக மாவட்டத்திலுள்ள வளங்கள் அனைத்தையும் இங்குள்ள ஒரு சில ஒப்பந்தக்காரர்களாலும், சில அதிகாரிகளாலும் குறிப்பாக, மத்தியிலுள்ள 15 வீதத்திற்கு மேற்பட்ட அரசியல் மோசடிக்காரர்கள் ஊடாக மிகவும் மோசமான முறையில் மாவட்ட வளங்கள் சூரையாடப்பட்டுக் கொண்டு வருகின்றன.

குறிப்பாக, அனுமதியற்ற மீன்பிடி, காட்டுமரங்களை வெட்டுதல், ஊத்தமணல் ஏற்றுதல், கிறவல் ஏற்றுதல், மணல் ஏற்றுதல், (கனிய வளங்களை அழித்தல்), வடிசாராயம் விற்பனை செய்தல், ஒரு சில ஒப்பந்த வேலைகள், இறால் வளர்ப்பு, முறையற்ற காணி வழங்குதல், முறையற்ற ஒப்பந்த வேலைகளைச் செய்தல், முறையற்ற இடமாற்றம், முறையற்ற நியமனங்கள், சுற்றுச்சூழலை மாசடைய வைத்தல் இது போன்ற வேலைளைச் செய்து இம் மாவட்டத்தில் தனவந்தகர்களாக மாறி ஒரு சில உயர் அதிகாரிகளின் இடமாற்றத்தைக் கூட இரத்துச் செய்கின்றளவிற்கு உடந்தை இல்லாதவர்களை இடமாற்றம் செய்வதற்கும் இம் மாவட்ட நிருவாகம் போய்க் கொண்டிருக்கின்றது என இரகசியமாக பேசியவர்கள், காதோடு காது கூறியவர்கள் இன்று மோசடிக்காரர்களுக்கு உடந்தையாக இருக்கின்ற சிலருக்கு கட்டுக்கட்டாக பணம் கைமாறுகின்றளவிற்கு இம் மாவட்டம் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.

இதற்கான பகீரங்க விசாரணைகளைச் செய்வதற்கு ஏன் மாவட்ட நலன்விரும்பிகள் ஆர்வம் இல்லாமல் உள்ளனர். எவ்வளவோ, திறமையான, நேர்மையான, நல்லொழுக்கமுள்ள, பண்புள்ள, நல்ல விழுமியங்களையும், கொண்டுள்ள பலர் இருந்தும் மோசடிக்கு எல்லையே இல்லாமல் நடந்து கொண்டு வருவது அநாகரிகமான செயல் அல்லவா? வேலியே பயிரை மேய்கின்றளவிற்கு நாங்கள் என்ன செய்வது என மக்கள் அங்கலாய்கின்றனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலியே பயிரை மேய்கின்றனவா?

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)