வாகனத்தோடு கொளுத்துவோம் - மிரட்டிய பௌத்த பிக்கு

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வாகனத்தோடு கொளுத்துவோம் - மிரட்டிய பௌத்த பிக்கு

“உங்களை வாகனத்தோடு கொளுத்தினாலே எங்களுக்கு மனநிம்மதியாக இருக்கும்”, என்று மயிலத்தடுவுக்கு சென்று திரும்பிய தமிழ் பேசும் சர்வமத தலைவர்கள் குழு மற்றும் செய்தியாளர்களை வழிமறித்து வைத்து பிக்கு ஒருவர் மிரட்டினார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேநேரம், இந்தக் குழுவினரை ஐந்து மணித்தியாலத்துக்கும் அதிகமான நேரம் தடுத்து வைத்திருந்த பிக்கு தலைமையிலான சுமார் 100இற்கும் மேற்பட்ட பெரும்பான்மையினத்தவர்கள் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தனர்.

நேற்று (22) செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,

மட்டக்களப்பு - பொலநறுவை எல்லைப் பகுதியாக உள்ளது மயிலத்தமடு - மாதவனை. இந்தப் பகுதியை தமிழ் மக்கள் பாரம்பரியமாக மேய்ச்சல் நிலமாகப் பயன்படுத்தி வந்தனர். கடந்த காலங்களில் இந்தப் பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதற்கு தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனிடையே, அங்கே மேய்ச்சலில் ஈடுபடும் தமிழ் மக்களுக்கு சொந்தமான கால்நடைகளை அங்கு குடியேறியவர்கள் சுட்டும், வெட்டியும் கொன்று வந்தனர். அத்துடன், மேய்ச்சலுக்கு மாடுகளை கொண்டு சென்றவர்களையும் தாக்கியும் வந்தனர். இது தொடர்பில் தமிழ் மக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்தபோதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், மாதனைப் பகுதியில் புத்தர் சிலை ஒன்று அண்மையில் வைக்கப்பட்டதுடன், விகாரை ஒன்றும் அமைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது. இது தொடர்பாகவும் - அங்கு பண்ணையாளர்களுக்கு நிலவும் பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காணவும் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதக் குழு உறுப்பினர்கள், செய்தியாளர்கள் நேற்று முற்பகல் 10 மணியளவில் அங்கு சென்று நிலைமைகளை அவதானித்த பின்னர் அங்கிருந்து திரும்பினர்.

இவர்களின் வாகனம் மாதவனைப் பகுதியிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் பயணிப்பதற்கு உள்ளாகவே அவர்களை பிக்கு தலைமையிலான குழு ஒன்று மதியம் 12 மணியளவில் வழிமறித்தது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த பெரும்பான்மை இனத்தவர்கள் சுமார் நூறு பேர்வரையில் அங்கு கூடினர். இவர்கள் வாகனத்தில் இருந்த தமிழ்பேசுவோரை அச்சுறுத்தினர். அத்துடன், இது தொடர்பான செய்திகளை வெளியிடக்கூடாது என்றும் அங்கு எடுக்கப்பட்ட காணொலிகள், படங்களை அழிக்குமாறும் செய்தியாளர்களை வற்புறுத்தினர். மேலும், செய்திகளை வெளியிட மாட்டோம் என்று எழுத்தில் தருமாறும் அச்சுறுத்தினர்.

இதன்போது, அங்கிருந்த பிக்கு, “உங்களை வானோடு சேர்த்து கொளுத்தினால்தான் எங்களுக்கு மனநிம்மதியாக இருக்கும்”, என்று கூறி மிரட்டினார் என்று சர்வமத குழு உறுப்பினரான ஆலம் தெரிவித்தார்.

தாங்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவது தொடர்பாக சர்வமத குழுவினர் உடனடியாக கரடியனாறு பொலிஸாருக்கு தவவல் அளித்தனர். எனினும், சுமார் 3 மணி நேரம் கழித்தே பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

பெரும்பான்மையின குழுவுடன் பேச்சு நடத்திய பொலிஸார் நிலைமையை ஓரளவுக்கு சுமுகமாக்கினர். எனினும், அங்கிருந்த பிக்கு, தமிழ் செய்தியாளர்களிடம் இருந்து படங்கள், காணொலிகளை அழிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார். அத்துடன், செய்தியாளர்களின் கமெராக்களை பெற்று சம்பந்தப்பட்ட காட்சிகளை அழித்தனர். அத்துடன், இது தொடர்பான செய்திகளை பிரசுரிக்க மாட்டோம் என்று கடிதம் எழுதுமாறும் நிர்ப்பந்தித்து அதனையும் பெற்றுக்கொண்டார் என்றும் தெரிய வருகின்றது.

இதைத் தொடர்ந்தே - சுமார் 5 மணிநேரம் கழித்து வானில் இருந்த தமிழ் பேசும் சமூகத்தவர்களை பெரும்பான்மையின கும்பல் அங்கிருந்து செல்ல அனுமதித்தது.

வாகனத்தோடு கொளுத்துவோம் - மிரட்டிய பௌத்த பிக்கு

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

இதனிடையே, மாதவனைக்கு சென்று திரும்பியவர்களை வழிமறித்து பெரும்பான்மையினத்தவர்கள் அச்சுறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிக்குவை கைது செய்யுமாறு வலியுறுத்தி நேற்று (22) மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மட்டக்களப்பு நகரில் படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபி அருகே நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

வாகனத்தோடு கொளுத்துவோம் - மிரட்டிய பௌத்த பிக்கு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)