
posted 24th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்கவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் எரிந்தது!
யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பஸ் நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்தது.
இச்சம்பவம் இன்று (24) வியாழன்அதிகாலை 4:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.
சம்பவம் குறித்து பஸ்ஸின் சாரதி கூறுகையில்;
புதன்கிழமை (23) இரவு எட்டு மணி அளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டோம்.
இன்று (24) வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் நீர்கொழும்பு தளுவகொட்டுவ பிரதேசத்தில் வைத்து திடீரென தீ பற்றி கொண்டது. உடனடியாக பஸ்ஸில் இருந்த பயணிகள் காப்பாற்றப்பட்டனர். வேறு வாகனங்களில் அவர்கள் விமான நிலையம் சென்றனர். நீர்கொழும்பு தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை கட்டுப்பாடுத்தினர் என்றார்.
இந்த தீ விபத்து காரணமாக பஸ் முற்றாக எரிந்து உள்ளது. பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. கொச்சிக்கடை பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)