
posted 19th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தராக மீண்டும் சி. சிறீசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துளார்.
அவரின் புதிய பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 24ஆம் திகதி ஆரம்பமாகும. அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு அவர் துணைவேந்தர் பதவியில் நீடிப்பார்.
கணித புள்ளிவிபரவியல் துறையின் மூத்த பேராசிரியரான சிறீசற்குணராஜா கடந்த 2020ஆம் ஆண்டு முதல் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)