மேர்வினின் கருத்தை வக்கிரப்படுத்தி அரசியல் செய்வதற்கு முயல்கிறார்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மேர்வினின் கருத்தை வக்கிரப்படுத்தி அரசியல் செய்வதற்கு முயல்கிறார்கள்

தமிழ் மக்களின் வாக்குகளை பகடையாக்கி அதிசொகுசு ஆடம்பர மாளிகைகளை பெற்றுக்கொண்டு அன்று மௌனமாக இருந்து இந்த நாடு பௌத்த நாடு என்று அங்கீகாரம் அளித்தவர்கள் இன்று முன்னாள் அமைச்சர் (மேர்வின் சில்வா) ஒருவருடைய கருத்தை வக்கிரப்படுத்தி தமிழ் மக்கள் மீது அக்கினி அரசியலை மீண்டும் செய்ய முயற்சிக்கின்றார்கள் - இவ்வாறு கூறியுள்ளார் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ. பி. டி. பி) ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீ ரங்கேஸ்வரன்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (18) அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

16 உறுப்பினர்கள் இருந்த சந்தர்ப்பத்தில் இந்த நாடு பௌத்த நாடு என்றும் பௌத்தத்துக்கே முன்னுரிமை என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் பாராளுமன்றத்தில் இருந்தபோது நீங்கள் முன்மொழிந்து அதற்கு துணை போனீர்களா இல்லையா என்று இன்று இவ்வாறு கருத்துக்கூறுபவர்கள் திரும்பிப் பார்க்க வேண்டும்.

அதுமட்டுமல்லாது தமிழ் மக்களின் வாக்குகளை தமக்கு ஏற்றவகையில் ஒரு பகடையாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் - குறிப்பாக இரா. சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்படும் அதி சொகுசு ஆடம்பர மாளிகைகள் எல்லாம் பெற்றுக் கொண்டு, அன்று பேசாமல் மௌனமாக இருந்து, இந்த நாடு பௌத்த நாடு என்று சொல்லி அங்கீகாரம் வழங்கிவிட்டு, இன்று(18) முன்னாள் அமைச்சர் ஒருவருடைய கருத்தை வக்கிரப்படுத்தி தமிழ் மக்கள் மீது அக்கினி அரசியலை மீண்டும் செய்வதற்கு முயற்சிக்கின்றார்கள்.

முன்பதாக நீங்கள் வலிந்து சென்றே மைத்திரி அரசாங்கத்துக்கு அன்று 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்கினீர்கள். அன்றைய காலகட்டத்தில்தான் குறிப்பாக 2015 ஆம் ஆண்டில்தான் வன ஜீவராசிகள் வனவளத் திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் ஆகியவற்றுக்கு அதிகாரங்கள் அசுரமாக வழங்கப்பட்டன.

இவற்றுக்கெல்லாம் அன்று அவர்களுக்கு அங்கீகாரங்களையும், பலத்தையும் வழங்கியிருந்தீர்கள். இன்று (18) மக்களை வழமைபோன்று ஏமாற்ற முயல்கிறீர்கள். அன்று முற்றுமுழுதாக மைத்திரி யுகத்தில் அவர்களுக்கு கண்மூடிக்கொண்டு ஆதரவை வழங்கியதால்தான் இந்த சம்பவங்கள் இன்று உச்சம் பெற்றிருக்கின்றன.

குறிப்பாக முல்லைத்தீவு பிரதேசத்திலே 35.6 வீதமான நிலங்கள் (84664.33 ஹெக்ரெயர்) வனவளத் திணைக்களத்தால் ஒதுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் அங்க 3,989 பேர் குடியிருக்க காணி இல்லாது திண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையை உருவாக்கியது தமிழ் தேசிய கூட்டமைப்பினர்தான். அன்று தூர நோக்கத்துடன் சிந்தித்து மக்களின் நலன்களிலிருந்து முடிவுகளை எடுத்திருந்தால் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்றும் கூறினார்.

மேர்வினின் கருத்தை வக்கிரப்படுத்தி அரசியல் செய்வதற்கு முயல்கிறார்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)