
posted 30th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
முன்னாள் அமைச்சர் அஸ்வரின் நினைவு தினம்
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரின் ஆறாவது நினைவு தினத்தையொட்டி அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியினால் துஆ பிராத்தனை இடம் பெற்றது.
அமைப்பின் மாவட்ட தலைவர் ஏ.எம். மாபீர் தலைமையில் அக்கரைப்பற்று மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம பேச்சாளராக நிறைவேற்றுப் பணிப்பாளரும்,மாவட்ட சாரண ஆணையாளருமான எம்.ஐ.உதுமாலெவ்வை கலந்து கொண்டார்.
இதேவேளை, மாவட்ட மட்டத்தில் அங்கத்தவர்களின் குடும்பங்களின் நன்மை கருதி எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய செயற்திட்டங்கள் , வறிய குடும்பங்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் போதைவஸ்து தடுப்பு தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டு அதற்கான நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)