
posted 12th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் புதிய நிர்வாகிகள்
அம்பாறை மாவட்டம், மாளிகைக்காடு பிரதேசத்தில் மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்ற ஜனாஸா நலன்புரி அமைப்பின் வருடாந்த பொதுக் கூட்டம் மாளிகைக்காடு சனசமூக நூலகக் கட்டிடத்தில் அதன் தலைவர் ஏ.எல். இம்தியாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது அமைப்பிற்கான புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.
தலைவராக ஏ.எல்.எம். அனுவர், செயலாளராக எம்.ஏ.எஸ். சுல்பிகார், பொருளாளராக ஏ.எல்.எம். பாயிஸ், உப தலைவராக ஏ.ஆர்.எம். ராபி, உப செயலாளராக ஏ.எல்.எம். பாஹிம், கணக்குப் பரிசோதகராக எம்.ஏ. இக்பால் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் அமைப்பின் காரியாலய பொறுப்பாளர்களாக ஏ.எம். பஸ்மீர், ஜே.எம்.பாஸீத், நிதிப் பொறுப்பாளராக எம்.ஏ. இக்பால், ஊடகப் பொறுப்பாளர்களாக ஏ.ஆர்.எம். ராபி, என்.எம். றுஸ்தி, ஜே.எம். ஹஸான் ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.
மேலும், அமைப்பாளர்களாக எப்.எம். ரகுபீ, ஏ.எம். தஸ்மீன், எம்.எம். நபார், ஆகியோரும் போஷகராக யூ.எம். றியாசும் தெரிவு செய்யப்பட்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)