
posted 3rd August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
மலையக எழுச்சிப் பேரணி யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்
வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட எனும் தொனிப் பொருளில் மாண்புமிகு மலையக எழுச்சி பேரணி இன்று வியாழனன்று (03) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது.
தலைமன்னார் முதல் மாத்தளை வரை ஆரம்பிக்கப்பட்டுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்கும் நோக்கில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரை இப் பேரணி செல்லவுள்ளது.
யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக இன்று (03) காலை ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து பேரணியாக யாழ். நகரிலிருந்து வவுனியா நோக்கி புறப்பட்டுச் சென்றது.
இதன்போது மதத்தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)