
posted 19th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்க
பெரியபுலம் மகாவித்தியாலயத்தின் 200ஆவது ஆண்டு நிறைவுப் பேரணி
யாழ் பெரியபுலம் மகா வித்தியாலயத்தின் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் வாகன பேரணியொன்று வெள்ளிக் கிழமை (17) முன்னெடுக்கப்பட்டது.
இப்பாடசாலையின் 200ஆவது ஆண்டு விழா இன்றும் நாளையும் நடைபெற உள்ள நிலையில் இதன் முதற்கட்டமாக வியாழக்கிழமை (17) இப்பேரணி நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் ந. பரமேஸ்வரன் கொடி அசைத்து பேரணியை பாடசாலை மூன்றலில் ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இப்பேரணி யாழின் பல இடங்களையும் சுற்றிவந்து நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பாடசாலையில் 200 வது ஆண்டு குறிக்கும் சின்னத்துடன் பல்வேறு வாகனங்கள் பேரணியாக சென்றிருந்தன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)